வெறும் வயிற்றில் டீ குடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்

காலையில் எழுந்ததும் பலரும் டீ குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். ஆனால், வெறும் வயிற்றில் தேநீர் அருந்துவது உடல் நலத்திற்கு நல்லதல்ல. டீயில் உள்ள டானின் என்ற சேர்மம், நாம் உண்ணும் உணவில் இருந்து உடலுக்கு இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதை தடுக்கும். மேலும், டீயில் உள்ள காபின் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் அளவை குறைத்துவிடும். எனவே, வெறும் வயிற்றில் டீ குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

தொடர்புடைய செய்தி