திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி அளிக்க வேண்டும் - திருமாவளவன்

திகவின் பரப்புரைப் பயணத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், 'நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரி, 30-07-2026 முதல் 02-08-2026 வரை மத்திய அரசை வலியுறுத்தி பரப்புரைப் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. உரிய விண்ணப்பம் அளித்தும் காவல்துறை அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நீட் வேண்டாம் என்பது அரசின் கொள்கையாக இருக்கும்போது, அதற்கு வலு சேர்க்கும் பரப்புரைக்கு அனுமதி மறுப்பது வியப்பளிக்கிறது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕