மார்ச் 1-ஆம் தேதி (நாளை) முதல் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடி தாக்கம் செலுத்தக்கூடிய சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. அந்த வகையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படலாம். இனி ஊழியர்கள் தங்கள் பிஎஃப் பணத்தை ஏடிஎம் (ATM) மையங்கள் மற்றும் யுபிஐ (UPI) செயலிகள் வாயிலாகவே நேரடியாக எடுத்துக்கொள்ளலாம். ரயில் டிக்கெட் புக் செய்ய 'ரயில் ஒன்' என்ற புதிய செயலி பயன்பாட்டிற்கு வருகிறது.