பேனர்கள் அகற்றப்பட்டதால் தாராபுரத்தில் நாதகவினர் திடீர் சாலை மறியல்

திருப்பூரிர்: தாராபுரத்தில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட நாதக கட்சியின் பேனர்கள் போலீசாரால் அகற்றப்பட்டதை கண்டித்து, அக்கட்சியினர் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கேள்வி எழுப்பிய நாதக நிர்வாகி ஒருவரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றதால், ஆத்திரமடைந்த கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி

✕
✕