வரதட்சணை கொடுமை.. தட்டிக்கேட்ட மாமனாரை கொன்ற மருமகன்

திருவள்ளூர் மாவட்டம் அருகே வரதட்சணை கொடுமையை தட்டிக்கேட்ட மாமனாரை, மருமகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாப்பேட்டையில், மகள் தமிழ்ச்செல்விக்கு நடந்துவரும் வரதட்சணை கொடுமையை அறிந்த தந்தை ராஜ், இதுகுறித்து மருமகன் ரவீந்தரிடம் கேட்டுள்ளார். இதனால், அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் மாமனாரை ரவீந்தர் அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: Kalaignarnews

தொடர்புடைய செய்தி