'டபுள் ஆக்குபன்சி' படத்தின் 'உயிரே' பாடல் வெளியீடு

அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில், சந்தோஷ் மற்றும் சம்யுக்தா விஸ்வநாத் நடிப்பில் உருவாகியுள்ள 'டபுள் ஆக்குபன்சி' படத்தின் 2-ம் பாடலான ‘உயிரே’ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடலை வித்யா தாமோதரன் எழுத, ஆதித்யா ஆர்.கே தனது காந்தக் குரலால் பாடியுள்ளார்.  தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மெலோடி ரகமான இப்பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி