தலைநகர் சென்னையில் இரட்டைக் கொலை.. பகீர் சம்பவம்

சென்னை மணிமங்கலம் அருகே அம்மணம்பாக்கம் கிராமத்தில் 2 பேர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். லோகேஷ் என்பவரின் வீட்டில் வைத்து பரத், சீனு ஆகிய இருவரையும் 6 பேர் கும்பல் வெட்டிக் கொன்றுள்ளனர். இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த அவர்கள் கொலை செய்துவிட்டு தப்பினர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட இருவரும் கானா பாடல்களை பாடிவந்துள்ளது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி