“தமிழ்நாட்டில் BJP - NDA டபுள் எஞ்ஜின் அரசு நிச்சயம் இங்கே ஆட்சிக்கு வரும்” என்ற பிரதமர் மோடியின் கருத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “ஒன்றிய பாஜக அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பாஜக செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்” என்றார்.
நன்றி: தந்தி