“பெட்ரோல் விலையால் மக்கள் பரிதவிப்பது தெரியவில்லையா?”.. சிபிஎம் கண்டனம்

“பெட்ரோல் - டீசல் விலையை இரண்டு வாரங்களில் நான்கு முறை உயர்த்தி உள்ளது ஒன்றிய பாஜக அரசு” என CPI(M) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பரிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?. அரசுக்கு வரும் வரி வருவாயில் இருந்து மக்களுக்கு விலையை குறைத்து நிவாரண வழங்க மத்திய - மாநில அரசுகள் முன்வர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி