மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்க்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை எனப் பேசியிருக்கும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரின் பேச்சு அடாவடித்தனத்தின் உச்சம் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அரவது அறிக்கையில், காவிரி நதிநீர் உரிமையை கர்நாடகத்துக்கு மட்டுமானதாக உரிமை கொண்டாட துடிக்கும் சூழ்ச்சியின் வெளிப்பாடே மேகதாதுவில் அணைகட்டும் வஞ்சகச்செயல். காவிரியில் தமிழர்களுக்கில்லாத உரிமை வேறு யாருக்கு இருக்கிறது? என கேள்வியெழுப்பியுள்ளார்.