புகை பிடித்தல் மற்றும் புகையிலை பயன்பாடு விளைவிக்கும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று, 'உலக புகையிலை எதிர்ப்பு தினம்' அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று (மே 31) நடிகர் அல்லு அர்ஜூன் இதுகுறித்து தனது X தளத்தில்,"தயவுசெய்து புகை பிடிக்காதீர்கள்" என கூறி 'Smoking Kills' என்ற வாசகத்துடன் கூடிய டி-ஷர்ட் அணிந்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.