சிலிண்டருக்கு கூடுதல் விலை கொடுக்க வேண்டாம் - அரசு

சமையல் சிலிண்டரை வீட்டில் டெலிவரி செய்யும்போது, டெலிவரி செய்யும் நபர் கூடுதலாக கட்டணம் வசூலிப்பது வழக்கமாக உள்ளது. குறைந்தபட்சமாக ரூ.20 முதல் ரூ.50 வரை கேட்டு வாங்கிச் செல்கின்றனர். இது குறித்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும், இந்த நடைமுறை தொடர்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் கூடுதல் கட்டணம் கொடுக்க வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், கூடுதலாக பணம் கேட்டால் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி