"PM கிசான் ஸம்மான் நிதி" திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 20-வது தவணையாக ரூ.2000 தொகை ஆகஸ்ட் 2 அன்று வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்பட இருக்கிறது. இதற்கு eKYC புதுப்பிப்பு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. eKYC அப்டேட் செய்யாதவர்களுக்கு இந்த நிதி வழங்கப்படாது எனவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. எனவே, உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையத்திற்கு சென்று உடனடியாக eKYC-யை புதுப்பித்து கொள்ளுங்கள்.