உணவைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க வீடுகளில் குளிர்சாதனப் பெட்டிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், உருளைக்கிழங்கு, வெங்காயம், பூண்டு, தேன், தக்காளி போன்ற சில உணவுகளை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது அவற்றின் சுவையையும் ஊட்டச்சத்து மதிப்பையும் குறைப்பதுடன், உடல்நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, இந்த ஐந்து பொருட்களையும் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளியே எடுத்து, உரிய இடங்களில் சேமித்து வைக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.