எம்எல்ஏ-க்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடமிருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதிலும் CM விஜய் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வலியுறுத்தியுள்ளார். அவரது X பதிவில், காவிரி நீரைத் திறந்து விட முடியாது என கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றிய CM, கர்நாடக அமைச்சரின் பேச்சுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்? என கேள்வியெழுப்பியுள்ளார்.