கண் எரிச்சல் என்பது பலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்னையாகும். தூசி, புகை, ஒவ்வாமை, அதிக நேரம் மொபைல் அல்லது கணினி திரையை பார்ப்பது, கண்களில் வறட்சி ஏற்படுவது, மாசுபட்ட நீர், கண் தொற்று மற்றும் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவது போன்றவை முக்கிய காரணங்களாகும். சுத்தமான தண்ணீரால் கண்களை கழுவுதல், கண்களை கைகளால் தேய்க்காமல் இருப்பது, போதுமான ஓய்வு எடுத்துக்கொள்வது மற்றும் திரை பயன்பாட்டை குறைப்பது போன்றவை கண் எரிச்சலைத் தடுக்க உதவும்.