தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மூலம் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர். திமுக அரசின் கபட நாடக ஏமாற்று வேலையால், அரசு ஊழியர்கள் விடுமுறை நாளான இன்றும்கூட போராட்டக் களத்தில் உள்ளனர். ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் லட்சக்கணக்கான குடும்பங்களை திமுக அரசு ஏமாற்றி உள்ளது என தெரிவித்துள்ளார்.