"விவசாயிகளைச் சிறுமைப்படுத்த வேண்டாம்”.. சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் பெ. சண்முகம், தமிழக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “விவசாயிகளை சிறுமைப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு உள்ளது. 5 ஏக்கர் வரை நிலம் கொண்ட விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடியும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்போருக்கு குறைந்தது 50 சதவீத தள்ளுபடியும் வழங்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அரசின் தற்போதைய நடைமுறையால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி