'உலக நாயகன்' என அழைக்க வேண்டாம் - கமல்ஹாசன்

தன்னை உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்தவொரு தனி மனிதனையும் விட சினிமாக் கலை பெரியது. கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்ததால், பட்டங்களையும், அடைமொழிகளையும் துறக்க முடிவெடுத்துள்ளேன். எனவே என் மீது பிரியம் கொண்ட ரசிகர்கள், கட்சித்தொண்டர்கள், திரைத்துறையினர் என அனைவரும் என்னை கமல், KH என்று குறிப்பிட்டால் போதுமானது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி