சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு மாற்றத்தை அடிப்படையாக கொண்டு பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்நிலையில் 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் விலை நள்ளிரவில் ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் ரூ.913 ஆகவும், தமிழகத்தில் ரூ.928.50 ஆகவும் உயர்ந்துள்ளது. புதிய விலை இன்று (மார்.06) முதல் அமலுக்கு வந்துள்ளது. வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை மீண்டும் ரூ.115 உயர்த்தப்பட்டுள்ளது.
நன்றி: பாலிமர்