56 பேர் மீது தாவிக்குதித்து கின்னஸ் சாதனை படைத்த நாய்

கனடாவைச் சேர்ந்த 'சார்டோன்' (Chardone) என்ற நாய், ஒரு நிமிடத்தில் 56 பேர் மீது தாவிக்குதித்து கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. கின்னஸ் உலக சாதனை நிறுவனம் (GWR) இந்தச் சாதனை குறித்த காணொளியை வெளியிட்ட நிலையில், அது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. நாய்களின் உடல் மற்றும் மன ஒருங்கிணைப்புக்குச் சான்றாக விளங்கும் இந்தச் சாதனையை மக்கள் வேடிக்கையுடனும் வியப்புடனும் பார்க்கின்றனர். இந்த அசாதாரண சாதனை தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

தொடர்புடைய செய்தி