வாக்கிங் சென்ற பெண்ணை கடித்து குதறிய நாய் (வைரல் வீடியோ)

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள அப்ஸ்கேல் சொசைட்டி குடியிருப்பில் நடைபயிற்சிக்கு சென்ற பெண் ஒருவரை, வளர்ப்பு நாய் ஒன்று கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் அங்கிருந்த பொதுமக்கள் நாயை கட்டுப்படுத்தி, அப்பெண்ணை மீட்டுள்ளனர். இந்நிலையில், மீட்கப்பட்ட பெண்ணின் உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சை பெற்று நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்தி