தமிழ்நாட்டில் நாய்க்கடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், இந்த ஆண்டு கடந்த 4 மாதங்களிலேயே தமிழ்நாட்டில் 2 லட்சத்து 63 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ரேபிஸ் நோயினால் மட்டும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். பொது சுகாதாரத்துறை இயக்குனர் சோமசுந்தரம் கூறுகையில், ரேபிஸ் நோய்க்கு தனி மருத்துவமோ, சிகிச்சையோ இல்லை என்றும், இந்த நோய்க்கு ஒரே தடுப்பு அனைத்து நாய்களுக்கும் ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி போடுவதுதான் என்றும் கூறியுள்ளார்.