சிறுமியை கடித்து குதறிய நாய் - பதறவைக்கும் வீடியோ

உத்தராகண்ட் மாநிலத்தில் சாலை ஓரம் நடந்து சென்ற சிறுமியை ஜெர்மன் ஷெப்பர்ட் இன நாய் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாய் கடித்ததில் சிறுமிக்கு பயங்கர காயம் ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். இந்த சம்பவம் நடந்த இரண்டு மாதங்களான நிலையில் தற்போது நாய் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிறுமியை நாய் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி