உங்கள் சமையல் சிலிண்டருக்கான மானியம் வங்கிக் கணக்கில் சரியாக கிடைக்கிறதா என்பதை www.mylpg.in என்ற இணையதளத்தில் மொபைல் எண் அல்லது LPG ஐடி மூலம் சரிபார்க்கலாம். இந்த இணையதளத்தில் உங்கள் எரிவாயு நிறுவனத்தின் லோகோவை தேர்வு செய்து, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது எல்பிஜி ஐடியை உள்ளிட்டால் மானியம் தொடர்பான முழு விபரங்களும் திரையில் தோன்றும். ஒருவேளை உரிய மானியம் உங்கள் கணக்கில் வரவில்லை எனில், pgportal.gov.in என்ற அரசு இணையதளத்தில் நீங்கள் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கலாம்.