காதலிலோ அல்லது திருமண வாழ்க்கையிலோ துணையின் மீது காட்டும் அதீத அன்பு, சில நேரங்களில் அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை ஆக்கிரமிக்கும் ஒரு தொல்லையாக மாறிவிடுகிறது. துணையின் ஒவ்வொரு செயலையும் கண்காணிப்பது, அவர்களின் தனிப்பட்ட நேரத்தை மதிக்காமல் இருப்பது போன்ற எல்லை மீறிய செயல்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தக்கூடும். எனவே, அன்பை பகிர்வதோடு மட்டுமல்லாமல், தங்களின் துணைக்கான தனிப்பட்ட இடத்தையும், சுதந்திரத்தையும் கொடுத்து மதித்து நடத்துவதே ஆரோக்கியமான உறவிற்கு அழகாகும்.