அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FOGDA) தமிழக அரசுக்கு தொடர் போராட்ட எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி முதல் அவசர அறுவை சிகிச்சைகள் தவிர்த்து, மற்ற அனைத்து மருத்துவ பணிகளையும் புறக்கணிக்க போவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். சம்பள உயர்வு மற்றும் காலமுறை பதவி உயர்வு உள்ளிட்ட நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.