ஹனிமூன் சென்ற டாக்டர் தம்பதி பலி.. ரூ.1.60 கோடி அபராதம்

சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த விபூஷ்னியாவுக்கும் - லோகேஸ்வரன் என்பவருக்கும் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. டாக்டர் தம்பதியான இவர்கள், தேனிலவுக்காக இந்தோனேசியா சென்றனர். அங்கு அவர்கள் சென்ற படகு கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இதனால், தேனிலவு அழைத்து சென்ற சுற்றுலா நிறுவனத்தின் மீது விபூஷ்னியாவின் தந்தை திருஞானசெல்வம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்ற்ம ‘ரூ.1 கோடியே 60 லட்சத்தை மனுதாரருக்கு சுற்றுலா நிறுவனம் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்தி