மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனர்களை சேர்க்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 15 முதல் புதிய பயனர்களுக்கும் ரூ.1,000 வழங்கப்படும். இதற்கான “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் நவம்பர் 15-ஆம் தேதியுடன் முடிவடைகின்றன. அதற்குப் பிறகு விண்ணப்பிக்க முடியாது என அரசு அறிவித்துள்ளது. தகுதியான பெண்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.