விளக்கை எரியவிட்டு தூங்குபவரா நீங்கள்? காத்திருக்கிறது இதய நோய் அபாயம்

இரவில் விளக்கை அணைக்காமல் உறங்குவது இதய நோய் மற்றும் நீரிழிவு அபாயத்தை அதிகரிப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒளியானது உறக்கத்தைத் தூண்டும் 'மெலடோனின்' ஹார்மோன் உற்பத்தியைத் தடுத்து மூளையைத் தூண்டுவதால், ஆழ்ந்த உறக்கம் பாதிக்கப்பட்டு உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, ஆரோக்கியமான வாழ்விற்கு இருளில் உறங்குவதே சிறந்தது என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி