61 சதவீத ஃபோன் பயன்படுத்துபவர்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பும், எழுந்ததும் மொபைல் போனைப் பார்ப்பதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இது மிகவும் ஆபத்தானது என்கின்றனர் நிபுணர்கள். போனில் உள்ள எல்இடி விளக்கு கண்களுக்கு ஆபத்தானது. இதனால் தூக்கமின்மை, நரம்பு பிரச்சினைகள், தோல் பிரச்சினைகள் மற்றும் மன எரிச்சலை ஏற்படுத்தும். காலை எழுந்த உடனேயே செல்போனை அதிகமாக பயன்படுத்த வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குழந்தைகளுக்கும் இது ஆபத்தை தரும்.