முயல்கள் மனித நகங்களை போலவே முயல்களின் பற்களும் வாழ்நாள் முழுவதும் வளர்ந்துகொண்டே இருக்கும் என்பதால், அவற்றை தேய்க்க எப்போதும் எதையாவது மென்று கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும். இல்லையெனில், பற்கள் தாடையை தாண்டி வளர்ந்து அவற்றின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்பதால், முயல்கள் தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவே எப்போதும் மெல்லும் பழக்கத்தை கொண்டுள்ளன.