மழைக்குப் பிறகு காளான்கள் ஏன் முளைக்கிறது தெரியுமா?

மழைக்குப் பிறகு காளான்கள் திடீரென முளைப்பது ஏன் என்ற கேள்விக்கு அறிவியல் பூர்வமான விளக்கங்கள் உள்ளன. காளான்கள் தாவரங்கள் அல்ல, பூஞ்சை இனத்தைச் சேர்ந்தவை. பூமிக்கு அடியில் உள்ள மைசீலியம் என்ற வலைப்பின்னலே அவற்றின் உண்மையான வாழ்விடமாகும். ஈரப்பதம் மற்றும் வெப்பம் சாதகமாக இருக்கும்போது இவை வேகமாக வளர்கின்றன. இவை இயற்கை சுழற்சியில் மட்கும் பொருட்களைச் சிதைத்து மண்ணை வளப்படுத்துகின்றன. இருப்பினும், நிபுணர்களால் உறுதிப்படுத்தப்படாத காட்டு காளான்களை உண்பது மிகவும் ஆபத்தானது என்று எச்சரிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕