உலகில் பல நாடுகள் மிகப் பழமையான வரலாற்றை கொண்டிருக்கின்றன. இந்த நாடுகள் எப்படி உருவானது என்று அதிகம் தெரியவில்லை என்றாலும், இவற்றின் நாகரிகம், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு காரணமாக அவை பழமையானதாக அறியப்படுகின்றன. அந்த வகையில் எகிப்து, ஈரான், இந்தியா, அர்மேனியா, ஈராக், சீனா, கிரேக்கம், மெக்ஸிகோ, ஜப்பான், சான் மெரீனோ ஆகிய 10 நாடுகள் உலகின் பழமையான நாடுகளாக அறியப்படுகின்றன.