கிருஷ்ணகிரியில் உரையாற்றிய த.வா.க வேல்முருகன் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தினர் தனக்கு எதிராக பேசுவதை கடுமையாக விமர்சித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், "தமிழக மக்களுக்காக எப்போதும் தமிழக வாழ்வுரிமை கட்சி தான் முன்வந்து களப்பணியாற்றும். எந்த நடிகரின் ரசிகரும் வரமாட்டார்கள், நடிகரும் வரமாட்டார்கள். இந்த உண்மையை பேசும்போது அவர்களுக்கு கோபம் வருகிறது. எங்களின் வரலாறு தனிசிறப்புமிக்கது. எங்களின் வரலாறுகளை படித்து தெரிந்துகொள்ளுங்கள்" என பேசினார்.