உங்கள் சம்பளம் இனி எவ்வளவு குறையும்.. எவ்வளவு தெரியுமா?

இந்தியா 29 தொழிலாளர் சட்டங்களை 4 புதிய சட்டங்களாக ஒருங்கிணைத்துள்ளது. புதிய விதிப்படி, CTC-யில் குறைந்தது 50% அடிப்படை சம்பளமாக இருக்க வேண்டும். இதனால் Basic Pay அதிகரித்து PF பிடித்தமும் அதிகரிக்கும். உதாரணமாக, ரூ.1 லட்சம் சம்பளத்தில் Basic ரூ.30,000-இல் இருந்து ரூ.50,000 ஆக உயர்வதால் PF ரூ.3,600-இல் இருந்து ரூ.6,000 ஆகும். இதனால் கையில் வரும் சம்பளம் குறைய வாய்ப்பு உண்டு என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி