வருமான வரி விதிகளின்படி, வீட்டில் ஆவணங்களின்றி தங்கம் வைத்திருக்க திருமணமான பெண்களுக்கு 500 கிராம், திருமணமாகாத பெண்களுக்கு 250 கிராம் மற்றும் ஆண்களுக்கு 100 கிராம் வரை மட்டுமே அனுமதி உண்டு. இந்த வரம்பிற்கு மேல் நகை வைத்திருப்பவர்கள், வருமான வரி சோதனையின் போது முறையான ரசீது அல்லது வருமான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். உரிய ஆவணங்கள் இல்லையெனில் உபரி நகைகள் பறிமுதல் செய்யப்படும் என கூறப்படுகிறது.