சாப்பிட்ட உடனே தூங்கும் பழக்கமா? எச்சரிக்கும் மருத்துவர்கள்

மதிய நேர குட்டித்தூக்கம் புத்துணர்ச்சி அளித்தாலும், அதில் செய்யும் சில தவறுகள் ஆரோக்கியத்தை பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, 20 முதல் 30 நிமிடங்களுக்கு மேல் தூங்குவது ஆழ்ந்த உறக்க நிலைக்கு கொண்டு சென்று உடல் சோர்வையும் தலைவலியையும் உண்டாக்கும். மாலை 3 மணிக்கு மேல் தூங்குவதை தவிர்ப்பது இரவு நேர தூக்கத்தை பாதிக்காமல் இருக்க உதவும்; அதேபோல் சாப்பிட்ட உடனே தூங்குவது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும்.

தொடர்புடைய செய்தி