காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்க்கிறீர்களா?.. எச்சரிக்கை

காலையில் கண் விழித்தவுடன் செல்போன் பார்க்கும் பழக்கம் உடல் மற்றும் மனநலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். அதிக வெளிச்சம் கண்களுக்கு அழுத்தத்தை தருவதுடன், மூளையில் மனஅழுத்த ஹார்மோன்களை தூண்டி பதட்டம் மற்றும் கவலை உணர்வை அதிகரிக்கலாம். சமூக வலைதள செய்திகள் மனநிலையை பாதித்து நாள் முழுவதும் சோர்வை ஏற்படுத்தும். மேலும் கவனக்குறைவு, தலைவலி, தூக்கமின்மை போன்ற பிரச்னைகளும் உருவாகலாம். காலை நேரத்தை செல்போனின்றி தொடங்குவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

தொடர்புடைய செய்தி