தினமும் காலையில் காஃபி குடித்த பின் உடனடியாக பல் துலக்குவதால் பல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என பல் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். காஃபியில் உள்ள அமிலத்தன்மை பற்களில் கறைகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி நிரந்தர பற்சிப்பி சேதம் மற்றும் பல் சிதைவுக்கு வழிவகுக்கும். கூடுதலாக சர்க்கரை ஈறுகளில் புண் அல்லது இரத்தப்போக்கு மற்றும் பீரியண்டால்ட் நோய்க்கு பங்களிக்கும். பீரியண்டால்ட் நோய் வந்தால் பற்கள் தளர்வாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. காஃபி குடித்த பிறகு குறைந்தது 30 நிமிடங்கள் காத்திருந்து பல் துலக்குவது நல்லது.