எப்போதும் ஊழல் ஊழல் என பேசுவதா? - முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு

ஆளும்கட்சியினர் எப்போதும் பேசினாலும் இடை இடையில் கடந்த ஆட்சியில் ஊழல் நடந்தது என ஒரே பாட்டை பாடி வருவதாக சட்டப்பேரவையில் இன்று (செப்.1) உரையாற்றிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கண்டனம் தெரிவித்தார். நாங்கள் சட்டசபைக்கு வர கூடாது அல்லது உங்கள் பேச்சை கேட்கக் கூடாது என நினைக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார். மேலும், எப்போதும் ஊழல் ஊழல் என்று மட்டுமே பேசுவது நல்ல நடைமுறை அல்ல என்றும், இத்தகைய போக்குகளை ஆளும்கட்சியினர் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி