வாக்காளர்கள் தங்கள் SIR படிவத்தின் நிலையை எளிதாக அறியும் வழிமுறை தற்போது விளக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் சமர்ப்பிக்கும் SIR படிவங்களை பூத் நிலை அலுவலர் (BLO) மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்துள்ளாரா என்பதை voters.eci.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம். அந்த இணையதளத்தில் உள்ள 'Fill Enumeration Form' லிங்க்கை கிளிக் செய்து லாகின் செய்த பின்னர், வாக்காளர் அடையாள எண்ணை பதிவிட்டால் நிலையை அறிந்து கொள்ளலாம்.