ஸ்மார்ட்போனை சில நேரங்களில் ரீஸ்டார்ட் செய்தாலே மெதுவான இணைய வேக சிக்கலை சரி செய்யலாம். செல்போனையும் செயலிகளையும் அவ்வப்போது அப்டேட் செய்வது இணைய வசதியை மேம்படுத்த உதவும். நெட்வொர்க் சிக்னல் நன்றாக இருக்கும் இடத்திற்கு உங்கள் போனை எடுத்துச் செல்லவும். நெட்வொர்க் அமைப்புகளுக்குச் சென்று, நெட்வொர்க் பயன்முறையை ஆட்டோ நிலையில் அமைக்கவும். VPN- ஐ பயன்படுத்தினால் இணைய வேகம் குறையலாம் என்பதால் அதை அணைக்க வேண்டும்.