மரபியல் துறையில் புரட்சிகரமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் (97) காலமானார். டி.என்.ஏ. குறித்த அவரது ஆய்வுகள், மனித இனத்தின் வரலாறு, நோய்கள், குற்றவியல் என பல துறைகளில் இன்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. டி.என்.ஏ.வின் இரட்டை சுருள் அமைப்பை கண்டுபிடித்ததன் மூலம் நவீன மரபியலின் வளர்ச்சிக்கு இவர் அடித்தளம் அமைத்து கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.