திமுக அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “அரசு வேலையை விற்று ரூ.888 கோடி ஊழல் புரிந்த புகார் மீதும் கூடிய விரைவில் வழக்கு பதிந்து, உண்மை வெளிக்கொணரப்படும் என்னும் நம்பிக்கையை இந்த நீதிமன்ற உத்தரவு ஏற்படுத்துகிறது. திமுக அரசின் ஊழல் கோட்டை சுக்குநூறாக இடிந்து விழும் நாளுக்கான Countdown இன்றோடு தொடங்கிவிட்டது” என குறிப்பிட்டுள்ளார்.