“வீரமணி வழக்கில் திமுகவின் செயல்பாடுகளை சாதாரணமாக கடக்க முடியாது”.. அமைச்சர் நிர்மல் குமார்

ஜெம் வீரமணி வழக்கில் முந்தைய திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் திமுக ஆட்சியில் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) ஏன் அமைக்கப்படவில்லை? என்றும், 2024 முதல் பலர் இந்த விவகாரத்தில் பேரம் பேசியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், “உளவுத்துறை தகவல் தெரிவித்திருந்தும் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. வழக்கில் திரைமறைவில் பலர் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர்” என்றார்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி

✕
✕