தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தனது அரசியலில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், “திமுக 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றிப் பெறும்” என நடிகர் வடிவேலு கூறியுள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் நடந்த பெண்கள் கபடி போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வடிவேலு இவ்வாறு கூறியுள்ளார். மேலும், “இந்த தேர்தலுக்குப் பிறகு மக்களுக்கு நல்ல வாழ்க்கை அமையப்போகிறது” என திமுக-வுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
நன்றி: தந்தி