எல்லா கருத்துக்கணிப்புகளையும் விஞ்சி திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், "இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த தொழில்களில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. உற்பத்தி, மென்பொருள் துறைகளில் இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். அமெரிக்காவின் 50% வரி விதிப்பு விவகாரத்தில் ஒன்றிய அரசின் பதில் நடவடிக்கை போதுமானதாக இல்லை" என்று தெரிவித்துள்ளார்.