மதுரையில் நடக்கும் திமுக பொதுக்குழு குறித்து பேசிய நாஞ்சில் சம்பத், "2026 சட்டப்பேரவை தேர்தலில் இமாலய வெற்றியை அடைய வியூகம் வகுக்கும் பொதுக்குழு. திமுக தொண்டர்களின் ரத்த நாளத்தில் நம்பிக்கை ஊட்டும் பொதுக்குழு. ஏழாவது முறையாக இன்பத்தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதற்கு உறுதியளிக்கும் பொதுக்குழு. பாசிஸ்டுகள் தமிழ்நாட்டில் ஊடுருவல் செய்வதை தடுக்க திமுகவால் மட்டுமே முடியும் என்பதை பறைசாற்றும் பொதுக்குழு இது" என கூறினார்.