வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு 2011-ம் ஆண்டு ஏற்பட்ட அதே படுதோல்விதான் மீண்டும் ஏற்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். தவெகவின் வருகை மற்றும் அவரது வாக்குவங்கியால் அதிமுகவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என குறிப்பிட்ட அவர், எதிர்வரும் தேர்தலில் அதிமுக 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நன்றி:SunNews